Wednesday, July 22, 2009

காதலன் எதிர்பார்ப்பு

கவிழன் தேடினான் தனிமையில் கவிதை கிடைக்குமா என்று ? கிடைத்தது வண்டு தேடியது பூக்களில் தேன் கிடைக்குமா என்று ? கிடைத்தது நான் உன்னிடத்தில் தேடினேன் என் இதயத்தை கிடைக்குமா என்று கிடைக்கவில்லை கிடைக்காமல் போனது என் இதயம் மட்டுமல்ல் அதை திருடிச்சென்ற நீயும் தான்....

நிலவு


காதலில் தோற்றவன் சொல்கிறான்
நிலவை பெண்ணுடன் ஒப்பிட்டது சரிதான்

ஒரே மாதத்தில் இரட்டை வேடம்......

இதயம்

இதயத்தின் தொலைதல் காதல்
இதயத்தின் வளைதல் விபசாரம்